Header Ads

ஜா-எல கணு­வ­னயில் ஹெரோ­யி­­னுடன் கைதான நப­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் மீட்பு



ஜா-எல கணு­வன பிர­தே­சத்தில் வைத்து ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கொழும்பு தெற்கு பிராந்­திய சட்ட அமு­லாக்கல் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து ஆயு­தங்கள் சில­வற்றை மீட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

கொழும்பு தெற்கு பிராந்­திய சட்ட அமு­லாக்க பிரிவு அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது  26 கிராமும் 150 மில்லி ஹெரோ­யினை வைத்­தி­ருந்த சந்­தேக நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­ட­துடன்  மேல­திக விசா­ரணைகளுக்­காக அச்­சந்­தேக நபர் பின்னர் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட ஜா-எல பிர­தே­சத்தை சேர்ந்த 33 வய­தான சந்­தே­க­ந­ப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து வெளி­நாட்டு தயா­ரிப்­பான 9 மில்­லி­மீற்றர் ரக துப்­பாக்­கிகள் இரண்டு, 9 மில்­லி­மீற்றர் ரகத்தை சார்ந்த 50 ரவைகள் மற்றும் கூரிய கத்­தி­யொன்­றி­னையும் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.அத்­துடன் இச்­சந்­தே­க­ந­ப­ரிடம் மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களின் மூலம் இவர் 2009 ஆம் ஆண்டில் தலங்­கம பகு­தியில் இடம்­பெற்ற கொலை ஒன்று தொடர்பில் தேடப்­பட்டு வந்­த­வெ­ரென உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் சந்­தே­க­நபர் நேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்­பு­கா­வலில் வைத்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு விடுக்­கப்­பட்ட  உத்தரவுக்கமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு தெற்கு பிராந்திய சட்ட அமுலாக்கல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.