Header Ads

சசிகலாவை முதல்வராக்கிட கிளம்பியது கருணாஸின் படை நடப்பது என்ன ?



சென்னையில் நாளை நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைமை பொறுப்பிற்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் எதிர்ப்பும், தீபாவின் ஆதரவாளர்களின் எதிர்ப்பும் சசிகலாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதும் தெரிகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவால் எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸ் சின்னம்மாவிற்கு ஆதரவாக களம் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டசபையில் நடிகர் கருணாஸ் முதன் முதலாக பேசும்போது, சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த காலத்தில் சாப்பிடக்கூட பணமில்லாமல் தெருவில் நாய்கூட படுத்திருந்ததாகவும், இன்று அதே சென்னையில் ஒரு எம்.எல்.ஏ.வாக மதிப்பு ஏற்படுத்தி கொடுத்த அம்மா அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அம்மா தான் எல்லாம் என்ற கருணாஸ், ஜெ. இறந்த அன்று அவரது சமாதியின் நின்று செல்ஃபி எடுத்து தனது நன்றிக்கடனை  காட்டியதை பலரும் கண்டித்ததுடன், நெட்டிஷன்கள் வறுத்தெடுத்தனர்.இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் சின்னம்மாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு ஆதரவாக தனது புலிப்படை தொண்டர்களை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிய வருகிறது.

இத்தகவல் அறிந்த நிர்வாகிகள் சிலர் கூலிப்படை கூட்டத்திற்கு புலிப்படை கூலிகள் பாதுகாப்பா.. இது எங்கே போய் முடிய போகிறதோ என்று புலம்பியதாக தெரிகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.