Header Ads

கிறுக்குத்தனமான நோபல் பரிசு: இறந்த பிறகும் ஏமாற்றப்படும் ஜெயலலிதா



ஜெயலலிதா ஏமாற்றப்படுவதற்காகவே பிறந்தவர் போலிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் போது, ஐநா சபையின் 'தங்கத்தாரகை விருது' வழங்குவதாக சொல்லி நன்றாக ஏமாற்றினார்கள். இப்போது, அவர் இறந்த பிறகும் 'அமைதிக்கான நோபல் பரிசு' என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவற்றை எல்லாம் வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள் மேடையில் பேசுவது மிகவும் வேதனை தரும் மற்றும் வேடிக்கையான விடையம். ஏன் என்றால் ,

நோபல் பரிசு அமைப்பின் சட்ட விதிகளின் படி - உயிரோடு உள்ளவர்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு வழங்கப்படும். இதனை நோபல் சட்டவிதி, பிரிவு 4 தெளிவாகக் கூறுகிறது. ஆனால் செல்வி ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைக்க உள்ளதாக பல அரசியல்வாதிகள் தற்போது கூறிவருவது மிகவும் கண்டிக்கத்தக்க விடையம் ஆகும். மக்களை ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

நோபல் பரிசினை அறிவிக்கும் போது உயிரோடு உள்ள ஒருவர் - அந்தப் பரிசு வழங்கும் போது உயிரோடு இல்லாவிட்டால் மட்டுமே - இறந்தவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்த விதிகளுக்கு மாறாக, 2011 ஆம் ஆண்டில் ரால்ஃப் ஸ்டெய்ன்மென் என்ற ஒருவருக்கு நோபல் பரிசு அறிவித்தார்கள். ஆனால், அந்த அறிவிப்புக்கு மூன்று நாள் முன்னதாக அவர் இறந்துவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் - நோபல் பரிசு நிருவாகக் குழுவைக் கூட்டி, ரால்ஃப் ஸ்டெய்ன்மெனுக்கு பரிசை அறிவிக்கும் போது அவர் இறந்துவிட்ட தகவல் எங்களுக்கு தெரியாது. அவர் உயிரோடு இருப்பதாகக் கருதிதான் அதனை அறிவித்தோம். நல்ல எண்ணத்துடன் அறிவிக்கப்பட்டதால், அந்த பரிசு செல்லும் என்று விளக்கம் அளித்தார்கள்.

(Work produced by a person since deceased shall not be considered for an award. Article 4. Statutes of the Nobel Foundation)

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.