Header Ads

குடித்துவிட்டு கார் ஓடிய சொந்த மகளையே பொலிசாரிடம் மாட்டி விட்ட பெற்றோர்



பிரித்தானியாவின் அயர்லாந்து பகுதியில் 18 வயதான ஷனன் என்னும் பெண், இரவு நேர கழியாட்ட விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு. அப்படியே தனது காரை ஓட்டிச் சென்று நண்பியை வீட்டில் இறக்கிவிட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். மது போதையை காரை ஓட்டி வந்து, தமது மகள் காரை பார்க் செய்வதை பார்த்த அவரது பெற்றோர். உடனடியாக பொலிசாருக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார்கள்.

விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை விசாரித்தவேளை, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு 1 வருட தடை விதித்த நீதிமன்றம் 400 பவுண்டுகளை அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பிழைவிட்டால் அவர்களை காப்பாற்றுவார்கள். சிலர் தட்டிக் கொடுப்பார்கள். இந்த இரண்டு வகையான பெற்றோரை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம்.

ஆனால் தனது பிள்ளை பிழை விட்டால் அது பிழைதான் என்று அடித்துக் கூறுவது மட்டுமல்லாது அதற்கான தண்டனையையும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரை இன் நாட்களில் நாம் பார்ப்பது அரிதான விடையம். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.