Header Ads

ஆர்.கே.செல்வமணி இங்கிலாந்து அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி..!

 
 
சங்கம்னாலே..சச்சரவு தான் போலிருக்குஇயக்குனர் விக்ரமன் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொருளாளராக உள்ளவர் சாட்சாத் நமது மனம் கவர்ந்த நடிகை ரோஜாவின் நாயகன் ஆர்.கே. செல்வமணி தான்.

இயக்குனர் வீ. சேகர் சில மாதங்களுக்கு முன் சிலை திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே சென்றார். இப்போ அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அவர் வெளியே வந்துட்டார். இப்போ அதே சங்கத்தை சேர்ந்த ஆர்.கே. செல்வமணி மீது ஒரு பகீர் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே. செல்வமணி படப்பிடிப்பு என்ற நோக்கம் காட்டி விசா எடுத்து பலரை முறைகேடாக லண்டனுக்கு அனுப்பி உள்ளார் என்கிறார் கார்த்திகேயன் என்கிற உதவி இயக்குனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பதிவை நிர்வாகிகள் புதுப்பிக்க தவறியதால், அதை அறிந்த கார்த்திகேயன் தன் பெயருக்கு அந்த சங்கத்தை பதிவு செய்துவிட்டாராம்.

சங்கத்தின் பதிவை பறிகொடுத்து விட்டு திக்கு தெரியாமல் திண்டாடி வருகின்றனர் நிர்வாகிகள். அத்தோடு ஆர்.கே.செல்வமணி இங்கிலாந்து அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும் கார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பாரா செல்வமணி?

 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.