Header Ads

ஓ.பி பன்னீர் செல்வத்தை போட்டு தள்ள குழு ரெடி: உளவுத்துறை கடும் எச்சரிக்கையாம்




அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில், முதல்வர் அதுவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவரது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று மத்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை லீக் செய்துள்ளதாம்.இது பற்றி சென்னை வாட்ஸ் அப் குரூப்  ஒன்றில் பின்வருமாறு தகவல்கள் பார்வேர்டு ஆகியுள்ளது. அவை வாசகர் பார்வைக்கு…அந்தச்செய்தி உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வருகிற 29 ஆம் தேதி அதிமுகவின் பொதுகுழு கூடுகிறது. அதில் பலப்பரீட்சை கடுமையானதாக இருக்கும்.

சசிகலா தரப்பு இந்த வாய்ப்பை எளிதாக இழந்து விடாது. இப்போதே பேரங்கள், ஆட்கடத்தல், விலை பேசுதல் போன்ற விஷயங்கள் ஆரம்பித்து விட்டன. குறிப்பாக எடப்பாடி தரப்பு பொதுச்செயலாளர் பதவியில் சசியை அமர வைத்தே தீருவது என்ற முடிவில் களப் பணியைத் துவங்கி விட்டது. கொங்கு மண்டலம் என்பது அம்மாவின் விசுவாசிகள் நிறைந்த பகுதி. அவர்களை வளைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு பணியை முடுக்கி விட்டுள்ளது. முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்று வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் அம்மா அலங்கரித்த பதவிக்கு சசியை அனுமதிக்கவே மாட்டார் என்கிறார்கள். இது சசிதரப்புக்கும் நன்றாகவே தெரியும். இந்த நேரத்தில் மத்திய உளவுப் பிரிவு, அந்த அதிர்ச்சி செய்தியை லீக் செய்துள்ளது.

பொதுக் குழு வரை முதல்வருக்கு கடுமையான பாதுகாப்பு அவசியம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உயிருக்கே ஆபத்து வரலாம்  என்று கூறியதாக செய்திகள் கசிகிறது. இந்த விஷயம் முதல்வருக்கும் சொல்லப்பட்டது என்கிறார்கள். ஆனால், முதல்வர் அஞ்சாத சிங்கம். யாருக்கும் பணியவோ, அஞ்சவோ மாட்டார். அவரும் போர்க்குணம் உள்ளவர் தான். அவருக்கும் ஒரு பெரிய பாதுகாப்பு படை இருக்கிறது என்கிறார்கள்.

எனவே கூலாகவே இருக்கிறார். தேவைப் பட்டால் சசியை கைது செய்யவும் தயங்க மாட்டார் என்கிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.