Header Ads

அமெரிக்க அதிபர் பொறுப்பு மாற்றத்தை சீர் குலைக்கும் ஒபாமா: ட்ரம் வீசும் குண்டு



ஜனவரி மாதம் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க்கவுள்ள டொனால் ரம்புக்கு மேலும் பல முட்டுக்கட்டைகளை ஒபாமா போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒபாமாவின் அனைத்து பதவிகள் மற்றும் அதிகாரங்கள் புது ஜனாதிபதியான டொனால் ரம்புக்கு செல்லவுள்ள நிலையில், ஒபாமா திடீரென சில நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு ஜனாதிபதி தனது அலுவலகத்தை விட்டு விலகுவது என்பது அமெரிக்காவில் அது ஒரு பெரிய விடையம். அவர் முன்னர் எடுத்த முடிவுகள், அவர் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ரகசியமாக வைப்பார்கள். மேலும் அவர் ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை மர்மமான முறையில் அழித்து விடுவார்கள்.

எனவே புது ஜனாதிபதி வந்தாலும் முன் நாள் ஜனாதிபதையை பழிவாங்க இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த வகையில் ஒபாமா தற்போது பல மாற்றங்களை செய்து, புதிதாக வரும் டொனால் ரம்பால் எதனையும் செய்ய முடியாதவாறு செய்ததோடு மட்டுமல்லாது. தனது நண்பியான ஹிலரி கிளிங்ரனுக்கும் பாதுகாப்பு வழங்கும் நிலமையை தோற்றுவித்துள்ளார். இதனால் டொனால் ரம் கடும் ஆத்திரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன் நிலையில் ஓபாமாவின் மனைவியான மிஷேல் ஓபாமா கடுமையான அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சிகளில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பது சரியாகத் தெரியவில்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.