Header Ads

தேசிய தலைவரால் போற்றப்பட்ட மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலி



ஈழத்தமிழர்களை தமிழக அரசு காக்கத் தவறிவிட்டது என்று கூறி 2006 இல் தனக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை ஏற்க மறுத்தவர் கவிஞர் இன்குலாப். தமிழீழ தேசிய தலைவரால் போற்றி மதிப்பளிக்கப்பட்டவர்.  அவர் எழுதிய கவிதை ஒன்று...

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள்..

அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து
சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

சதுரங்கப்பலகையிலிருந்தும் விரைந்து விற்றுக்கொண்ட கலாநிதிகளின்

ஆய்வாழங்களிலிருந்தும் அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு அடிபெயர்ந்த நெடுமரமாய்ச் சாய்ந்து கிடக்கின்ற கவிஞர் பெருமக்களின் பேனா முனைகளிலிருந்தும் விலகி, வெகு தொலைவில் முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி குருதி கொட்டும் செம்மொழியாய்….

- கவிஞர் இன்குலாப்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.