Header Ads

வங்கில்யில் கொள்ளையடித்து பணத்தை கொண்டுவந்து கேசினோவில் சூதாடிய நபர்கள்



கசீனோவில் விளையாடி தோற்ற கையோடு வெளியே சென்று வங்கியை கொள்ளையடித்து. மீண்டும் திரும்பிவந்து சூதாடிய நபர்கள் இவர்களாக தான் இருக்க முடியும்.

அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னியா மாநி­லத்தைச் சேர்ந்த 52 வய­தான கெரி ஜோன்ஸன், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் கெசினோ நிலை­ய­மொன்­றுக்குச் சென்று சூதாட ஆரம்­பித்தார்.6 மணித்­தி­யா­லங்கள் அங்கு அவர் சூதாட்­டத்தில் ஈடு­பட்டார். பிற்­பகல் 3 மணி­ய­ளவில் 25 டொலர் கட்­டணம் செலுத்தி, சூதாட்ட மேசையில் தனது நிலையை தக்க வைத்­துக்­கொண்டு, அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.

அதன்பின் 13 மைல் தொலை­வி­லுள்ள வங்­கி­யொன்­றுக்குச் சென்று, வெடி­குண்டு மற்றும் ஆயுதம்  இருப்­ப­தாக அச்­சு­றுத்தி, பணத்தை கொள்­ளை­யிட்டார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.இக்­ கொள்ளை நட­வ­டிக்­கையின் பின்னர், மீண்டும் மேற்­படி கெசினோ விடு­திக்குச் சென்று தனது சூதாட்­டத்தை தொடர்ந்­தாராம் கெரி ஜோன்ஸன்.

வங்கிக் கொள்ளை தொடர்­பாக கெரி ஜோன்ஸன் உட்பட 24 பேருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.