Header Ads

எவ்வாறு லண்டனை தகர்பது: சிறுவயது சிறுவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐ.எஸ் டீச்சர் இவர்



நாம் சிறுவராக இருக்கும் போது, படித்து டாக்டராகவேன்டும், எஞ்சினியராக வேண்டும் என்று டீச்சர் சொலித் தருவார். ஆனால் சிரியா , ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் பல பள்ளிக்கூடங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள சிறுவயது சிறுவர்களுக்கு, படிப்பு சொல்லிக் கொடுப்பது இல்லை.

மாறாக நீங்கள் வளர்ந்து பெரிய ஆள் ஆகியதும், லண்டனில் உள்ள பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தை தகர்க்கவேண்டும் என்றும். பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தையும் தகர்க்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் சில சிறுவர்களின் சிறு வயது கனவே , லண்டனை தகர்ப்பது தான் என்றால் நம்புவீர்களா ? ஆம் இது தான் உண்மை.

லண்டன் எரிவது போலவும், பாரிஸ் குண்டு வெடிப்பில் சிக்கி தவிப்பது போலவும் இவர்கள் புகைப்படங்களை எடுத்து சிறுவர்களுக்கு காட்டி. இப்பவே தீவிரவாதிகளாக வளர்த்து வருகிறார்கள். இதனை நாம் இன்னும் 10 ஆண்டுகளில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் லண்டன் பரிஸ் போன்ற நகரங்கள் சிலவேளைகளில் பாதுகாப்பற்ற நகரங்களாக மாறும் நிலை கூட தோன்றலாம். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.