Header Ads

வேலை பார்த்த ஆளின் 16 வயது மகளை காம வலையில் வீழ்த்திய லண்டன் முதலாளி



தன்னிடம் வேலை பார்த்த ஆளின் 16 வயது மகளை காம வலையில் வீழ்த்திய முதலாளி , ஹீத்-ரூ ஏர்போட்டில் வைத்து அதிரடிக் கைது. அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளர் தரும் சிறப்புச் செய்தி.

பிரித்தானியாவில் உள்ள பீட்ட-பரோ நகரில் தமிழர் ஒருவர் கடை ஒன்றை வைத்திருந்துள்ளார். அவரது கடையில் ஒரு நபர் வேலைசெய்து வந்த நிலையில். கடைக்கு மேலே உள்ள வீட்டை வேலை செய்யும் அந்த நபருக்கு முதலாளியான தமிழர்கள் கொடுத்து. குடும்பத்தோடு அங்கே தங்குமாறு கூறியுள்ளார். முதலாளி மிகவும் நல்லவர் என எண்ணிய அந்த தொழிலாளிக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது.

தனது கடைக்கு மேல் தங்கியிருந்த தொழிலாளியின் மகளை(16) , அவர் அவ்வப்போது சந்தித்து பேசி. இறுதியாக தனது காம வலையில் வீழ்த்தியுள்ளார். சுமார் 3 மாத காலமாக மாணவியை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இறுதியாக ஆத்தாக் கொடுமையில் அப்பெண் தனது பெற்றோருக்கு சொல்லப் பயந்து, பாடசாலையில் அன்பாக பழகும் தனக்கு பிடிச்ச ஒரு டீச்சரிடம் விடையத்தை தெரிவித்துள்ளார். அவர் உடனே பொலிசாருக்கு விடையத்தை தெரிவிக்க. குறித்த முதலாளியை பொலிசார் தேடிச் சென்றவேளை அவர் இத்தாலி சென்றுவிட்டதாக அறிந்துள்ளார்கள்.

எனவே அவரை எந்த நாட்டிலும் கைதுசெய்யும் பிடிவரந்து ஒன்றை பொலிசார் பெற்று அவரை தேடிவந்த நிலையில். இதனை அறியாத அவர் இத்தாலியில் இருந்து மீண்டும் லண்டன் வந்துள்ளார். அவரை ஹீத் ரூ விமானநிலையத்தில் வைத்தே பொலிசார் மடக்கிப் பிடித்து. வழக்கு தொடுத்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலம் கருதி, எந்த ஒரு மேலதிக தகவலையும் நாம் வெளியிடவில்லை. இன் நிலையில் உங்கள் பெண் பிள்ளைகளோடு யார் அதிகம் பேசுகிறார்கள் ? அவர்கள் யார் ? ஏன் பேசுகிறார்கள் என்ற விடையங்களை எத்தனை பெற்றோர் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இச்செய்தியை நாம் பிரசுரித்துள்ளோம். இதுபோன்ற ஈனச் செயலை செய்பவர்கள் இனியாவது திருந்தட்டும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.