Header Ads

வைகோ எம்.பி ஆகிறார்..! பாஜக ஆதரவு..? ஆளுநரை சந்தித்த பின்னணி இதுதான்



தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, பாமக, ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.அந்த தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். பின்னர் பாஜக நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.

அதன் பிறகு பாஜகவில் இருந்து வைகோ வெளியேறி மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சமிபத்தில் வைகோ திடீரென்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது மத்திய அரசுடன் ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவே சில நாட்களாக மத்திய அரசை அவர் விமர்சிக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும், அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை தற்போதுள்ள பாஜக அரசு வழங்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.