Header Ads

என்னை கற்பழி என்று கூறாத நிலையில் மப்பு பின்னர் எப்படி நீ தப்புவாய் - நீதிபதி



பிரித்தானியாவின் மேன்செஸ்டர் பகுதியில் 20 வயதான பெண் ஒருவர் தள்ளாட்டமாக நடந்து வந்துள்ளார். கடும் மது போதையில் வந்த அப்பெண்ணை பற்றைக்குள் இருந்து வந்த 18 வயது இளைஞர் கட்டிப் பிடித்துள்ளார். ஆனால் அப்பெண் எதனையும் சொல்லவில்லை. மெளன் சம்மதம் என நினைத்த அந்த குவைத் நாட்டு இளைஞர் அப்பெண்ணை தறதறவென்று அருகில் உள்ள பற்றைக்குள் இழுத்துச் சென்று கண்டபடி முத்தமிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அப்பெண் கூச்சலிடவே யாக்கூவோப் என்னும் அந்த இளைஞர் எழுந்து ஓடி மறைந்துவிட்டார்.

பொலிசார் ஒருவாறு அவரை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள். மிகவும் அனுபவம் மிக்க மற்றும் பல வருடங்களாக நீதிபதியாக பணியாற்றிவரும் கில்பேஃட் பேசுகையில் குடித்துவிட்டு, உங்களை நீங்களே காப்பாற்ற முடியாத நிலையில் அலைவதும். மது போதையில் சென்று நீங்களாகவே குற்றச் செயலை செய்ய தூண்டுவதும் தற்போது சகஜமாகிவிட்டது என்று அப்பெண்ணை பார்த்து சாடியுள்ளார். இரவு வேளைகளில் மது போதையில் அலைந்தால் இப்படி நடக்க தான் செய்யும் என்ற பொருள்பட அவர் கூறிய வார்த்தைகள் பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் குவைத் நாட்டு இளைஞர் செய்தது குற்றச் செயலாகும் என்று கூறிய நீதிபதி அவருக்கு தண்டனை வழங்கும் திகதியை ஒத்திவைத்துள்ளார். தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தவும் அவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.