Header Ads

பேய்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஐ.எஸ் அமைப்பு: முட்டாள்கள்



சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு தெற்கே உள்ள சிறிய கிராமம் ஒன்றை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள். அங்கே வசித்து வந்த வயதான தாத்தா ஒருவரின் தலையை வெட்டி அவருக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். இது பல பொதுமக்கள் முன் நிலையில் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அதுபோக இக்கொடூரக் காட்சிகளை அவர்கள் இன்ரர் நெட்டிலும் பரவிட்டுள்ளார்கள்.

இதில் வினோதம் என்னவென்றால் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் அமைப்பினர் பேய் , பிசாசு , மந்திரவாதிகள் இது போன்றவற்றை நம்புவது தான் என்கிறார்கள். இவர்கள் இதுவரை பலரை மந்திரவாதி என்று சொல்லியும். சாத்தானை வழிபடும் நபர்கள் என்று சொல்லும் கொலைசெய்துள்ளார்கள். ஐ.எஸ் அமைப்பினருக்கு இதன் மேல் ஏன் அபார நம்பிக்கை உண்டு என்பது புரியவில்லை என்கிறார்கல் சில ஆய்வாளர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி , எவரையாவது வெட்டிக் கொலை செய்தால் தான் மக்கள் தம் மீது ஒருவகையான பயத்தில் எப்பொழுதும் இருப்பார்கள் என்று நினைத்தே இவ்வாறு செய்வதாக வேறு சிலர் கருத்து வெளியிடுகிறார்கள். இதில் எது உண்மை என்பது தெரிய்வில்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.