Header Ads

வென்றாலும் வெள்ளை மாளிகை செல்ல முடியாத நிலை தோன்றுமா ரம்பிற்கு



இதனை தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்று கூறுவார்களோ தெரியவில்லை. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க தேர்தல் முடிவு பெற்று, டொனால் ரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 270 ஆசனங்களை எவர் கைப்பற்றுகிறாரோ அவரே ஜனாதிபதி. ஆனால் அதற்கு முன்னதாக டிசம்பர் மாதம் 19ம் திகதி அமெரிக்க செனட் சபை கூடி, ஜனாதிபதியாக ரம்பை அறிவிக்க வேண்டும்.

அதன் பின்னரே டொனால் ரம் வெள்ளை மாளிகைக்கு செல்ல முடியும். அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் , ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆசனங்கள் உண்டு. அதில் 270 ஆசனத்தை எந்த கட்சி போட்டியாளர்கள் பெறுகிறார்களோ அவர்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜனாதிபதி வேட்ப்பாளர் வெற்றிபெற்றதாக கருதப்படுகிறார். இருப்பினும் குறித்த 270 நபர்களும் இதனை உறுதிசெய்ய வேண்டும்.

ஆனால் தற்போது இதில் 15 நபர்கள் தாம் டொனால் ரம்புக்கு ஆதரவாக வாக்கு போட மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில். இவர்களுக்கான ஆதரவு 35 ஆக பெருகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மொத்தமாக (சபையில்) 53 டொனால் ரம்புக்கு எதிராக வாக்கு போட்டால். அது நம்பிக்கை இல்லா தீர்மாணமாக மாறி ஜனாதிபதி பதவி டொனால் ரம்புக்கு கொடுக்கப்பட மாட்டாது. தற்போது பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு இக்கட்டான நிலை தோன்றியுள்ளது என்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.