Header Ads

டொனால் ரம் லண்டன் வர முடியாமல் தடை- பெட்டிஷன் 1 மில்லியனை தாண்டியது எப்படி



லண்டனில் வசிக்கும் தமிழர்கள் பல தடவை, பிரித்தானிய அரசாங்கத்தின் இணையத்தளத்தில் பல பெட்டிஷன்களை ஆரம்பிப்பது வழக்கம். 10,000 ஆயிரம் கையொப்பம் கிடைத்தால். அரசாங்கம் அது தொடர்பாக சிந்திக்கும். ஆனால் 1 லட்சம் கையெழுத்து கிடைத்தால் அதனை ஏற்று அரசாங்கம் விசாரித்து நடைமுறை படுத்தும். அந்த வகையில் பிரித்தானிய அரசு டொனால் ரம்பை உத்தியோகபூர்வமாக பிரித்தானியாவுக்குள் அழைக்க கூடாது என்று , அரசாங்க இணையத்தில் எவரோ போராட்டத்தை ஆரம்பிக்க. அது பெரும் சூடு பிடித்து ஒன்றரை மில்லியன்( ஒன்றரைக் கோடி) பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

தற்போது நாம் செய்தியை பதிவேற்றம் செய்யும் வேளை சுமார் 1,555,000 கையெழுத்துகள் போடப்பட்ட நிலையில். பிரித்தானிய பாராளுமன்றம் இந்த விடையத்தை தற்போது விவாதிக்க உள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த கோரிக்கைக்கு மக்கள் அதிக செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்று தெரிந்தால். பிரித்தானிய அரசு டொனால் ரம்பை பிரித்தானியா அழைப்பதில் பெரும் சிக்கல் தோன்றும். ஏன் எனில் ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி தனது செல்வாக்கை இழக்க நேரிடும்.

இன் நிலை பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. இது டொனால் ரம்புக்கு மட்டும் அல்ல. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கும் இது பெரும் தர்மசங்கடமான நிலை தான். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.