Header Ads

போலீஸ் காரை கடத்தி 100 மைல் வேகத்தில் சென்ற நிர்வாண பெண்



அமெரிக்காவில் நிர்வாண பெண் ஒருவர் போலீஸாரின் காரை கடத்தி பிசியான சாலைகளின் வழியே 100 மைல் வேகத்தில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருமணி நேர துரத்தலுக்கு பின்னர் அந்த நிர்வாண பெண் போலிசாரிடம் பிடிபட்டார்.

அமெரிக்காவில் உள்ள அரிசானா மாகாணத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஒரு பெண் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணுக்கு உடை கொடுத்து அணியுமாறு கூறினர். ஆனால் அந்த பெண் திடீரென போலீசாரின் காரை எடுத்து கொண்டு மிக  வேகமாக சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பக்கமாக வந்த ஒரு காரை நிறுத்தி, நிர்வாண பெண்ணை துரத்தினர். 100 மைல் வேகத்தில் சென்ற நிர்வாண பெண்ணின் காரை ஒருவழியாக ஒரு மணி நேர துரத்தலுக்கு பின்னர் பிடித்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.