Header Ads

லண்டனில் 3,000 பொலிசார்: கடும் பாதுகாப்பு இன்னும் சில மணி நேரத்தில் கொண்டாட்டம்



லண்டனில் மத்திய பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் கூடியுள்ள நிலையில். அவ்விடத்தை பாதுகாக்க என சுமார் 3,000 ஆயுதம் ஏந்திய பொலிசார் குவிக்க்கப்பட்டுள்ளார்கள். முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கடும் பாதுகாப்பு ஏற்பட்டுகள் போடப்பட்டுள்ளதோடு. பல வீதித்தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் செல்லாமல் பொலிசார் தடுத்துள்ளார்கள்.

லண்டன் நகருக்குள் தற்போது எந்த ஒரு கனரக வாகனமும் செல்ல முடியாதவாறு பொலிசர் தடுத்துவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சரியாக 11.55 மணிக்கு லண்டன் பாலத்தில் வானவேடிக்கை நிகழ்த்தபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ் தீவிரவாதிகள் 2017ம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆனால் மக்களோ இது எதனையும் ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை. லண்டனில் தற்போது மக்கள் வெள்ளம் பெருகி , ஒரே கூட்டமாக காணப்படுகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் மேலும் கோலாகலமாக லண்டன் காட்சியளிக்கும். இதற்கான நேரடி வீடியோக்களை நாம் ஒளிபரப்ப உள்ளோம். அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.