Header Ads

லண்டன் அஸ்டா பெற்றோல் ஸ்டேஷனில் 450,000 பவுண்டுகளை ஆட்டையை போட்ட பெண்



வின்டி கிளைமென்ஸ் என்னும் 47 வயதுப் பெண். லண்டன் அஸ்டா சூப்பார் மார்கெட் ஒன்றின், பெற்றோல் ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தனது கல்லா பெட்டியில் எவ்வளவு காசை பெற்றுக்கொள்கிறார் என்ற தகவலை, அவரது எலக்ரானிக் கல்லா பெட்டி கம்பியூட்டருக்கு அனுப்புவது இல்லை. இதனால் இவர் கொடுக்கும் ரிசீட் மற்றும் பணத்தை மனேஜர் பெற்றுக்கொள்வது வழக்கம். வழமையாக பெற்றோல் அடிக்க வரும் நபர்கள், வேறு பொருட்களை வாங்கினால். பெற்றோல் காசை மட்டும் சரியாக கணக்கு பார்த்து , அந்த காசை அவர் இறுதியில் கொடுத்துவிடுவார்.

ஆனால் வேறு பொருட்கள் வங்கினால், அவர் அந்த காசை அப்படியே ஆட்டையை போட்டு விடுவார். இதனூடாக சுமார் 4 வருடமாக இவர் 4 லட்சத்தி 50,000 ஆயிரம் பவுண்டுகளை(சுமார் 5 கோடி ரூபாவை) சம்பாதித்து பெரும் செலவு செய்து வந்துள்ளார். இன் நிலையில் இதனை அஸ்டா நிர்வாகம் கண்டு பிடிக்கவே இல்லை. இவரது வீட்டுக்கு சும்மா விசிட்டுக்கு சென்ற ஒரு நபர் விடையம் ஒன்றை கவனித்துள்ளார். வீட்டில் உள்ள பல இடங்களில் ஆங்காங்கே பல நூறு பவுண்டுகள் கவனிப்பார் அற்றி கிடந்துள்ளது. போதைக் குறைக்கு நிலத்தில் கூட 20 பவுண்டு நோட்டுகள் வீழ்ந்து கிடந்துள்ளது.

ஒரு பெரிய மில்லியனர் வீட்டில் கூட இப்படி இருக்க சான்சே இல்லை. இதனை பார்த்து சந்தேகித்த அவர் பொலிசாருக்கு துப்பு கொடுக்க. அவர்கள் அஸ்டா நிர்வாகிகளை அணுகி விசாரணை நடத்த. அவர்கள் கடந்த 4 வருட கணக்கு வளக்கை பார்த்தால், இப் பெண் சுமார் 450,000 ஆயிரம் பவுண்டுகளை சுருட்டியுள்ள விடையம் தெரிய வந்துள்ளது. தற்போது இவருக்கு 3 வருட சிறைத் தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.