Header Ads

பாக்தாத் அருகே ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 காவல்துறையினர் உயிரிழந்தனர்..!!

பாக்தாத் அருகே ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 காவல்துறையினர் உயிரிழந்தனர்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் நஜப் நகரை அடுத்துள்ளது அல் காடிசியா நகர். இந்த வழியாக வந்த வாகனங்களை அப்பகுதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வாகனத்தை தடுத்தி நிறுத்திய போலீசார், அதனை சோதனையிட முயன்றபோது, அந்த வாகனத்தில் அமர்திருந்தவன் வெடிகுண்டுகளை வெடிச்கச் செய்தான். இதில் 7 காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 17 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவத்துக்கு இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.