Header Ads

அதிரடியாக 7 நாட்டை தடை செய்த ரம்: விசர் பிடித்துவிட்டதாக அமெரிக்கர்கள் அறிவிப்பு




இன்று உலகமே திகைத்து நிற்கிறது. லிபியா, சூடான் , ஜெமன், சொமாலையா, ஈரான் , ஈராக் , மற்றும் சிரியா ஆகிய நாட்டு அகதிகளை அமெரிக்கா இனி உங்வாங்காது என்று சற்று முன் ரம் அறிவித்துள்ளார். இது போக இன் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் எவரும் வர முடியாது என்ற சட்டமும் , ஒரு வகையான  நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை பல உலக நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளது. இதேவேளை சர்வதேச மன்னிப்பு சபை இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. இன் நிலையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் விருதை வென்ற ஈராக்க்கிய இயக்குனர் ஒருவர் அமெரிக்கா செல்ல முடியாமல் திரும்பியுள்ளார். இதனால் இனி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வையே அமெரிக்காவில் நடத்த முடியாது என்ற பெரும் இக்கட்டான சூழ் நிலை உருவாகியுள்ளது என்கிறார்கள்.

இவை எங்கே கொண்டு போய் விடுமோ தெரியவில்லை. ஒரு பேப்பரை எடுத்து அதில் கிறுக்கி கையெழுத்து போட்டுக் காட்டி இது தான் சட்டம் என ரம் அறிவிக்க. அங்கே இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க்க , ரம்புக்கு அருகில் உள்ளவர் மட்டும் கை தட்டி அதனை வரவேற்றுள்ளார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.