Header Ads

கனடா பொலிசாரின் மூளையை அதிரவைத்த ஈழத்து தம்பதிகள் இன்னும் தலை சுற்று நிற்க்கவில்லை



லீவு கிடைச்சா போதும், உடனே இலங்கை சென்று பணத்தை வாரி இறைத்து பந்தா காட்டுவது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த எவரும் இவ்வாறு செய்யவே மாட்டார்கள். ஆனால் எம்மில் சிலர் ஊருக்கு சென்றால் பெரும் பந்தா காட்டுவது வழக்கம். அவர்கள் பின்னால் ஒரு கதை இருக்கு... அது போல தான் இந்த உண்மைக் கதை...

சிவகுமார்(57) நகுலேஸ்வரி சிவகுமார்(54) இந்த தம்பதிகள் கனடா டொரண்டோவில், ஒரு எஸ்டேட் ஏஜன்டை அணுகி தமது வீட்டை ஈடாக வைத்து கடன் பெறவேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதுவும் 200,000 ஆயிரம் டாலர்களை. அங்கு வேலை பார்த்த நபர் இவர்களின் அடையாள அட்டை வங்கிக் கணக்கை பார்த்துவிட்டு. வீட்டின் விலையை பார்த்து, 200,000 கடன் தர வங்கியில் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். இது 2015ம் ஆண்டு நடந்துள்ளது. பின்னர் மீண்டும் அதே வீட்டை அடகு வைத்து மேலும் ஒரு 200,000 பவுண்டுகளை பெற இவர்கள் முயற்ச்சி செய்துள்ளார்கள்.

ஏற்கனவே கடன் வாங்கிய இவர்கள் முகம் பழக்கப்பட்டதனால் அன் நபரும் இவர்களை சந்தேகிக்கவில்லை. 2ம் முறையும் இவர்கள் 200,000 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட சில நாட்களில் தான். இவர்கள் ஈடாக வைத்து பணம் பெற்ற வீடு இவர்களுக்கே சொந்தமில்லை என்ற பெரும் இடி தெரியவந்தது. அதுவும் வங்கி தனக்கு மாதம் மாதம் கட்டவேண்டிய தொகையை சரியாக கட்டவில்லை என்று வீட்டு உரிமையாளருக்கு கடிதம் போட்டு அவரை கோர்டுக்கு இழுத்துள்ளது. தான் எபொழுது பணத்தை பெற்றேன் என்று அன் நபர் ஆடிப்போனார். அவர் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க. பொலிசார் நடத்திய அதிரடி விசாரணையில். இந்த 2 மொல்லமாரி தம்பதிகள். வீட்டு உரிமையாளர் பெயரை தெரிந்து, அவரது பெயரில் வங்கி ஒன்றையும் திறந்து. பல போலியான பத்திரங்களை ரெடி செய்து அந்த வீட்டை அடமானம் வைத்து பணத்தை மோசடியாக பெற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இவர்களது படத்தை பொலிசார் வெளியிட்டு, இவர்கள் யார் என்பதனை காட்டி தருமாறு கோரிக்கை விடுத்தார்கள். இன் நிலையில் தற்போது இவர்கள் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் ஒட்டு மொத்தமாக சுமார் 400,000 (நானூறு ஆயிரம் கனேடிய டாலர்களை) களவாடியுள்ளார்களே. அந்த பணம் எங்கே என்று இதுவரை இவர்கள் வாயே திறக்கவில்லை. சில வேளைகளில் சினிமா படங்களில் வருவது போல, இவர்கள் இந்த பணத்தை கொள்ளையடித்து அநாதை இல்லத்திற்கு கொடுத்து வந்துள்ளார்கள் என்று கதை அளந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையப்பா... மொத்தத்தில் கனடா தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றியுள்ளார்கள்.

இந்த செய்தியை சிறிது நேரத்தில் அப்படியே காப்பி அடித்து JVP நியூஸ் என்னும்  இணையம் தன்னுடைய செய்தி போல போடும் பாருங்களே ...

2 comments:

  1. Only once they got $200K. not twice.

    ReplyDelete
  2. Thankyou,highlight is இந்த செய்தியை சிறிது நேரத்தில் அப்படியே காப்பி அடித்து JVP நியூஸ் என்னும் இணையம் தன்னுடைய செய்தி போல போடும் பாருங்களே.
    Super I like this ,100% they will do copy it.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.