Header Ads

லண்டனில் அணு குண்டு நீர் மூழ்கியையே கடத்தி இருக்கலாம்: பாதுகாப்பில் பெரும் ஓட்டை



பிரித்தானியாவின் பேர்க்ஷியாரில் உள்ள அணு குண்டு பாதுகாக்கும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்த 30 அதிகாரிகள் வேலை ஒரே நடையில் இழந்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் அவர்கள் பாதுகாக்கவேண்டிய இடத்தை சரியாக பாதுகாக்காமல் சேம்பேறியாக இருந்தது தான். பிரித்தானியாவில் மிக அதி முக்கிய இடங்களில் ஒன்று இந்த அணு குண்டு சேமிப்பு நிலையம் ஆகும்.

இங்கே நீர் மூழ்கி கப்பல் தொடக்கம் பல சாதனங்கள் உள்ளது. அவற்றில் பல அணு குண்டை ஏந்திச் செல்லும் சாதனங்கள் ஆகும். இவற்றை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கே செல்லாமல் வேறு இடத்தில் கூடி லூட்டி அடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவ்விடம் பாதுகாப்பே இன்றி இருந்துள்ளது என்பது CCTV கமரா மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடையம் அல்கைடா அல்லது, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தெரிந்து இருந்தால். அவர்கள் பிரித்தானியாவிலேயே அணுகுண்டை கடத்தி அன் நாட்டிலேயே அதனை வெடிக்க வைத்திருந்திருப்பார்கள். இது பெரும் அழிவை தேடி தந்திருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த அதிகாரிகள்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.