Header Ads

முல்லைத்தீவு கடலில் களமிறங்கிய இந்திய ரோலர்கள் எதற்காக!! வந்தன ? அனுப்பியது யார் ?

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 



தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவரின் ஆலோசனைக்கு ஏற்ப இவ்விடயத்தை கடற்படையினருக்கு அறிவித்துள்ளேன். எனவும் தெரிவித்தார். 



 இதேவேளை இவ்விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.