Header Ads

மங்கள லண்டனில் சைலண்டாக செய்யும் மூவ் என்ன என்று தெரியுமா தமிழர்களே ?



மங்கள சமரவீர தற்போது லண்டனில். அவர்  திங்கள் லண்டன் வருவதாக கூறப்பட்டாலும். அவர் சனிக் கிழமையே லண்டன் வந்துவிட்டார். ஆபிஷல் இல்லாமல் மறை முகமாக அவர் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை முதலில் சந்தித்தார். இதனூடாக ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்ள அவர் பெரும் திட்டத்தை வகுத்தார். நேற்று முன் தினம் (செவ்வாய்) அவர் பொறிஸ் ஜோன்சனை சந்தித்து உரையாடி இலங்கைக்கு ஆதரவு கேட்டார்.

நேற்றைய தினம்(புதன்) தடாலடியாக செதம் ஹவுஸ்( காமன் வெலத்) சென்று அங்கேயும் பலருடன் உரையாடி. இலங்கைக்கு மேலும் வலுச்சேர்த்தார். இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை கொடுக்க தாம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் கோடிக்கணக்கான பொருட்களுக்கு வரி இல்லை. இதனால் இலங்கை கொள்ளை லாபம் அடித்து பெரும் அன்னிய செலாவணியை பெறும். சிங்கள பகுதிகள் மட்டும் இதனால் முன்னேற உள்ளது.

ஆனால் லண்டனில் உள்ள , BTF, GTF, என்று பல அமைப்புகள் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கூறிவரும் நிலையில். இவர்கள் எதனையும் செய்யவில்லை. இலங்கையில் இன்று வரை காணமல் போதலும் கொலைகளும் இடம்பெற்று வருகிறது. இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுட்டுக் காட்டி இருந்தால். அவர்கல் இலகுவில் இச்சலுகையை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள் , சில ஆய்வாளர்கள். ஆனால் எதுவுமே தமிழர் பக்கத்தில் நடக்கவே இல்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.