Header Ads

கனேடிய தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி! இனிமேல் இந்த மாதம் முழுவதும் உங்களுக்குத்தான்!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாசார மாதமாகக் கொண்டாட கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கனேடிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி அமோக ஆதரவு தெரிவித்துள்ளன. 

M 24 என பெயரிடப்பட்ட இந்த நகர்த்தல் பத்திரத்திற்கு 283 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் கலாசார மாதம் அனுசரிக்கப்படவுள்ளது. 


கனேடிய மக்களுக்கு அங்கு வாழும் தமிழ் சமூகம் ஆற்றி வரும் பங்களிப்பிற்கு பிரதிகூலமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.