Header Ads

தப்பிய புலி ரஸ்டாரண் சென்றது: றோட்டில் ஆயுதத்தோடு பொலிசார் பட்ட பாடு தெரியுமா ?



சிசிலி என்னும் தீவில், புலிகளை மற்றும் ஏனைய மிருகங்களை வைத்து சேர்க்கஸ் காட்டும் நிறுவனம் ஒன்று உள்ளது. நேற்றைய தினம் இந்த சேர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வெள்ளை பெங்கால் புலி ஒன்று, அங்கிருந்து லாவகமாக தப்பிச் சென்றுவிட்டது. இதனை உடனே தேடி அன் நிறுவனத்தை சேர்ந்த பலர் அலைந்து திரிய. புலியானது பெரும் பசியோடு வாசம் வந்த இடம் நோக்கிச் சென்றுள்ளது.

அது வேறு ஒன்றும் அல்ல. உணவகம் தான். ஒரு உணவகத்தின் வாசலில் அது உட்கார்ந்து உள்ளே செல்ல முயன்று வந்துள்ளது. இன் நிலையில் ஆயுதம் தாங்கிய பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு. குறித்த புலியை கைப்பற்றியுள்ளார்கள். நல்லவேளையாக அது உணவக்தின் முன் நின்று விட்டது என்றும். அது யாரையும் தாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள் பொலிசார்.

ஆனால் புலி ஏன் பசியோடு இருந்தது ? என்ற கேள்வி எழுகிறது. குறித்த கம்பெனி அதற்கு சரியாக உணவு வழங்கவில்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.