Header Ads

இந்த அசிங்கனான பிராணியில் இருந்து தான் மனிதன் தோன்றினான்: நம்புவீர்களா



விஞ்ஞானிகள் தாம் மனித குலத்தின் முன்னோடிகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். குறித்த ஒரு வகை கடல்வாழ் உயிரினத்தில் இருந்து மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவது உண்மைதானா என்று பலர் வியந்து போய் உள்ளார்கள். கடலில் சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கு மூட்டை போன்ற அமைப்பை உடைய உயிரினம் ஒன்று வாழ்ந்துள்ளது. இதற்கு கழிவை வெளியேற்றும் குதம் இல்லை. வாயால் சாப்பிட்டு. பின்னர் கழிவைக் கூட வாயால் கக்கும் ஒருவகை மீன் இனம்.

இதனை சாக்கிறோட்டஸ் என்று அழைக்கிறார்கள். உலகில் முதன் முதல் தோன்றி 2 செல்லுக்கு மேற்பட்ட உயிரினங்களில் இதுவும் ஒன்று. இதன் டி.என்.ஏ மாதிரிகள் மனித டி.என்.ஏ யுடன் ஒத்துப் போவதாகவும் கூறப்படுகிறது. மனிதன் கடலில் தோன்றிய ஒரு வகை பிராணியாகவே முதலில் இருந்துள்ளான். இதன் காரணத்தால் தான் உப்பு நீரில்(தாய் வயிற்றில்) பிள்ளை உருவாகிறது என்கிறார்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நீரில் நீந்திச் செல்லும் ஒருவகை பிராணியாகவே இருந்து வந்துள்ளார்கள்.

பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கு வந்து. தரையில் வாழப் பழகியுள்ளார்கள். அதற்கு அமைவாக மனித உடல் மாற்றம் அடைந்து. முழுமையாக தரையில் வாழும் தோற்றம் பெற்றார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறரார்கள். இதுவே உண்மை என்றும் கூறப்படுகிறது. லிமூரியா கண்டம் தொடர்பான பல பழைய மற்றும் ஆதிகால நூல்களில் மனிதனை கடல் பிராணி போல பலர் வரைந்து வைத்துள்ளமை இதற்கு பெரும் சான்றாக அமைகிறது. மேலும் மனிதன் ஆண் மற்றும் பெண் அடங்கிய இரு பால் இனமாக இருந்து. பின்னரே பிரிவடைந்து ஆணாகவும் பெண்ணாகவும் மாறியுள்ளான்.

முதலில் பெண் இனமே தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளது. அதாவது பெண் இனம் என்று சொல்வதை விட பெண் மற்றும் ஆண் தன்மை கொண்ட மனிதனே தோன்றியுள்ளான். இதனை நாம் எல்லா ஆண்களிலும் பார்க்க முடியும். சிறு வயதில் ஆண்கள் பெண்களை ஒத்த குரலில் இருப்பதும். பருவம் அடையும் போது ஆண் குரலாக மாறி கம்பீரம் பெறுவதனையும் நாம் அவதானித்து இருப்போம். ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருப்பது உண்மையே. இதனை சைவ சமயம் அர்த்த நாதீஸ்வரர் என்று கூறி வழிபடுவதும் தொன்மையான பழக்கமே. பெண்ணை ஒத்த ஒரே உடல் அமைப்பில் தான் ஆண் இருக்கிறான். ஆனால் ஆண் குறியை தவிர. அது கூட கூர்பின் ஒரு அங்கமாக தான் கருதப்படுகிறது.

இந்த வகையில் பெண் இனத்தில் இருந்து பிரிந்து , பரிணாம வளர்ச்சி பெற்று ஆண் உருவாகி இருக்கவேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக உள்ளது.

அதிர்வுக்காக

கண்ணன்
source : https://www.sciencedaily.com/releases/2017/01/170130111008.htm

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.