Header Ads

இந்த கதையைக் கேட்டால் தலையே சுற்றும்: பொலிசார் செக் பண்ண வந்தால்...



மைக்கேல் டன் என்னும் 57 வயது பாலியல் குற்றவாளி, சிறையில் இருந்து விடுதலையாகி சில வருடங்களாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சிறுமிகளோடு உறவு கொள்ளும் பழக்கம் இருந்ததால், வாரம் இரண்டு தடவை, அவரது வீட்டுக்கு பொலிசார் வந்து சோதனை செய்வது வழக்கம். மேலும் அவரை வீதியில் கூட பொலிசார் கண்கானிப்பது வழக்கம். ஆனால் இந்த பாழாய் போன ஜென்மம் , ஒரு சிறுமியை பிடித்து யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார். பொலிசார் அடிக்கடி வருவார்கள் என்பதனால், தனது பிரிஜ் க்கு பின்னால் சுவரில் ஒரு துளை போட்டு.

அதில் சுரங்கம் போல ஒன்றை செய்து. பொலிசார் வரும் போது சிறுமியை அதில் அடைத்துவிடுவது வழக்கம். இது பொலிசாருக்கு தெரியாது. மேலும் சிறுமி தப்பிச் செல்லாமல் இருக்க, அவர் வீட்டில் அலிசேஷன் இன நாயை வளர்த்து வந்துள்ளார். அது சிறுமியை கடுமையாக காவல் காத்து வந்துள்ளது. இதனை தற்போது தான் பொலிசார் கண்டு பிடித்து இன் நபரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளார்கள். இன் நபர் இதுவரை காலமும் அச்சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.