Header Ads

இலங்கையில் ஆபாச படங்களை பகிர்வதால் சீரழியும் பெண்கள்: அதிர்ச்சி தரும் தகவல்



சமூக வலைத்தள மோசடிகளின் ஊடாக சிறிலங்காவில் பாதிப்படையும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சைபர் கிறைம் தொடர்பில் மாதாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைப்பாதாகவும் இதில் அனேகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் இணையத்தளத்தின் ஆழம் அறியாமல் புதிய முயற்சியில் ஈடுபட முனைவதன் விளைவாகவே அநேகமான பெண்கள் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேடிடுவதாக அவர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் பாரதுரமானவை உடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் இணையத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக அவை குறிப்பிட்ட செக்கன்களுக்குள் பல்வேறு தரப்பினர்கள் இடையிலும் துரிதமாக பகிரப்படுவதன் காரணமாக இது குறித்து பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி அதிகம் என்றும் அவ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.