Header Ads

டொனால் ரம்புக்க்கே ஆப்பு வைத்த நீதிபதி: உத்தரவை தடைசெய்தார் நீதிபதி இனி என்ன நடக்கும்



அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால் ரம், நேற்று முன் தினம் திடீர்  என வர்த்தமானி அறிக்கை ஒன்றை வெளியிட்டு. அதனை நடை முறைச் சட்டமாக மாற்றினார். 7 முஸ்லீன் நாடுகளில் இருந்து , இனி எந்த ஒரு அகதிகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை என்றும். இன் நாடுகளில் இருந்து வருபவர்கள் இனி அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப்படாத சட்டத்தையும் கொண்டு வந்தார். இதனால் அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பெரும் குழப்பகரமான சூழல் தோன்றியது. யாரை உள்ளே விடுவது ? யாரை தடுப்பது என்ற பெரும் பிரச்சனை உருவாகியது.

இதனால் முறைப்படி விசா எடுத்து அமெரிக்காவுக்குள் வந்த பல நூற்றுக் கணக்கானவர்களை பொலிசார் ஏர்போட்டில் தடுத்தார்கள். அது போக தடைப் பட்டியலில் உள்ள நாடுகளின் பாஸ்போட்டோடு கிரீன் கார்ட் உள்ளவர்களை கூட அமெரிக்காவுக்குள் அனுமதிக்க பொலிசார் மறுத்தனர். இந்த குழப்பகரமான சூழலில். அகதிகள் அந்தஸ்த்துகோரி தஞ்சமடைந்த அனைத்து நபர்களையும் திருப்பி அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவிக்க விடையம் மேலும் சூடுபிடித்தது. இதனை அடுத்து சனிக்கிழமை மனித உரிமை அமைப்பு ஒன்று அவசரமாக நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுக்க. அதன் நீதிபதி, ரம் விதித்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

சகல சக்த்திகள் கொண்ட ஒரு நாட்டு ஜனாதிபதி, போட்ட சட்டத்தை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்ற பெரும் கேள்வி எழுந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் உடனடியாக நீதிமன்ற உத்தரவை காட்டி, நீதிமன்றத்தை அவமதிக்கவேண்டாம் என்று பொலிசாரை எச்சரிக்க. பொலிசார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வேறு வழி இல்லாமல் தாம் தடுத்துவைத்திருந்த மக்களை விடுதலை செய்துள்ளார்கள். இன் நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சில நாட்களுக்கே செல்லுபடியாகும். அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்பை என் நேரமானாலும் ரத்துச் செய்யலாம். அதனால் உச்ச நீதிமன்றிலும் அமெரிக்கர்கள் வழக்கை இன்று(திங்கள்) தாக்கல் செய்கிறார்கள்.

அதிபர் ரம்பின் இந்த முடிவை, செயலிழக்கச் செய்ய உச்ச நீதிமன்றத்தால் முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் இதனை அமெரிக்க செனட் சபை அங்கிகரிக்க வேண்டும். இருப்பினும் அமெரிக்க செனட் சபை இந்த சட்டத்திகு எதிர்ப்பு தெரிவித்தால், அமெரிக்க அதிபர் தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து முறியடிக்கவும் முடியும். அப்படி அவர் செய்தால் மக்கள் மத்தியில் நிச்சயம் செல்வாக்கை இழப்பார். இதனால் அமெரிக்காவில் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. அமெரிக்க அதிபரா ? இல்லை அமெரிக்க சட்ட திட்டமா என்ற பிரச்சனை எழுந்துள்ளது. பிரித்தானியா உட்பட பல நாடுகள் ரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.