Header Ads

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல்…!

இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தீவிரவாத தடுப்பு அமைப்பு இதுகுறித்த கடுமையான எச்சரிக்கை தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகள் புத்தாண்டு ஒட்டிய கொண்டாட்டங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தென் மேற்கு பகுதிகளில் அதிக எச்சரிக்கை தேவை எனவும் குறித்த பகுதிகளில் தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி பரபரப்பான சந்தைகள், விழாக்கால கொண்டாட்ட விடுதிகள் என குறிப்பிட்ட பகுதிகளில் செல்ல வேண்டாம் எனவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவரின் மனைவி படுகாயமடைந்ததும், அவரது சாரதியும் மற்றும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் நிகழ்ந்துள்ளது.அப்போதும் இஸ்ரேல் இதேப்போன்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.