Header Ads

சிங்களவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்போடு வீடு கட்டிக் கொடுக்கும் கும்பல்: வேடிக்கை பார்க்கும் ததேகூ



யாழ் நாவற்குழி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கலை சில சிங்களவர்கள் ஆக்கிரமித்து. அங்கே குடிசை போட்டு தங்கியிருந்தார்கள். இதற்கு தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழர் தாயக நிலங்களை சிங்களவர்கள் வந்து குடியேறி பறித்து வருவதாக தமிழர்கள் போராடினார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை , அவர்கள் விரைவில் காலி செய்வார்கள் என்று கூறினார்கள் நல்லாட்சி அரசு. ஆனால் மெல்ல மெல்லமாக அவர்களை அங்கே குடியமர்த்தி, இறுதியாக அவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்க அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை தமிழர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரிந்து. அங்கே முன்னரே போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு. வீடு கட்டும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பேடிகள் அப்படியே சிரித்துக்கொண்டு ரணில் வீட்டில் ரச்சிக்கறி சாப்பிட்டு கொண்டாடி வருகிறார்கள். ஒருபக்கம் எதிர்கட்சி தலைவர் என்ற எலும்பு துண்டை போட்டுவிட்டு. இன்னொரு பக்கம், அழைத்து நல்ல உணவையும் கொடுத்துக்கொண்டு. மறு முனையில் செய்யவேண்டிய அனைத்தையும் ரணில் மற்றும் மைத்திரி மெல்ல மெல்ல செய்து வருகிறார்கள்.

இப்படி ஒரு விடையம் நடப்பதே தெரியாமல் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் பல்லைக் காட்டிக்கெண்டு சமரசம் பேசி வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் யாழ்பாணம் முழுவதும் சிங்களவர் வந்து குடியேறி இருப்பார்கள். அப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் ?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.