Header Ads

ஓரினச்சேர்க்கை குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நடந்த கதை என்ன தெரியுமா ?

அமைச்­ச­ர­வையில் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அனு­மதி கோரி யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இப்­ப­டி­ யோ­சனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறி­யது யார்? மனித உரிமை செயற்­பாட்டுத் திட்ட அறிக்­கையில் பாலியல் நாட்டம் என்ற யோச­னையே முன்­வைக்­கப்­பட்­ட­தாக சுகா­தார, போசனை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழ­க்கி­ழமை மருத்­துவ திருத்தச் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், ஓரி­னச்­சேர்க்கை பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. இதன்­மூலம் எயிட்ஸ் நோய் அதி­க­ளவில் பரவி வரு­கின்­றது. 


ஆகவே இது குறித்து அர­சாங்கம் அவ­தா­ன­மாக செயற்­ப­டு­கின்­றது. எனினும் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அங்­கீ­காரம் கோரி அமைச்­ச­ர­வையில் யோசனை முன்வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. இப்­படி யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக யார் கூறி­யது? அமைச்­ச­ர­வையில் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அங்­கீ­காரம் கோரு­மாறு யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. 


இது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும். அதற்கு மாறாக அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்ட மனித உரிமை திட்­டத்தின் பிர­காரம் பாலியல் நாட்டம் என்று முன்வைக் கப்பட்ட யோசனையே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை யின் அடிப்படையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.