Header Ads

காணாமற்போனோரை தேட முடியாது: கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம்



காணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது எனவும் படகில் கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த நபர்கள் தொடர்பான எவ்வித தகவலையும் இலங்கைக்குள் தேட முடியாது என பொலிஸார் கூறுகின்றனர்.

தற்போதுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக அவர்கள் கூறினார்கள். ஏனையவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இலங்கையில் இல்லை. வெளிநாடு சென்றார்கள் என சட்டரீதியான தகவல்களும் இல்லை. படகில் கள்ளத்தனமாக சென்றார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். சிலர் உயிருடன் இல்லை என சந்தேகிக்கப்படுகின்றது. சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் அவதானிக்க வேண்டும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.