Header Ads

ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலை! மேலும் சிக்கிய அதிர்ச்சி ஆதாரங்கள்!

யாழ். ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண்ணின் படுகொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொம்மைவெளி பகுதியை சேர்ந்த குறித்த இருவரையும் நேற்றுமுன்தினம் (27) இரவு வேளையில் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் யாழ்ப்பாண ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதாகவும், மற்றைய நபர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் குறித்த இருவரும் நடமாடியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே யாழ் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். 


 தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாகவும் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.