Header Ads

டிரம்ப் மார்க் இடையில் உண்டான பயங்கர மோதல்! நடக்கபோவதுதான் என்ன ?

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 


சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. 


ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே. அனைவரும் மறைமுகமாக ட்ரம்ப்பை தாக்கி பேசி வந்த நிலையில் முதல் முறையாக ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இன்று அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க் கூறியிருப்பதாவது ”எனது மூதாதையர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்திலிருந்து வந்தவர்கள். பிரிசில்லாவின் பெற்றோர் சீனா மற்றும் வியட்நாமிலிருந்து வந்த அகதிகள். 


அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் உருவான நாடு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். என்னை போல பலரும் அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு பற்றி எண்ணி கொண்டிருப்பீர்கள். இந்த நாட்டை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்காக மில்லியன் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்படாத புலம்பெயர்ந்த மக்களை பயத்தில் ஆழ்த்துவது நியாமல்ல.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.