Header Ads

மீண்டும் வந்த நாமல்! ஏன் இவனது வாய் சும்மாவே இருக்காதா? வாயை குடுத்து வாங்கிக்கட்டுவது இப்படித்தான்

ஒற்றையாட்சி என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு பிரிவினைவாதத்தை நோக்கி மைத்திரி – ரணில் அரசாங்கம் பயணிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே இலக்காகும் எனவும் கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்தி என்பது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதுதான் எனவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மாத்திரமன்றி மேலும் பல சொத்துக்களை இந்த அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு எதுவுமே எஞ்சியிருக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே இந்த அரசாங்கம், மக்களிடம் ஆணையைப் பெற்றது என குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இன்று அந்த ஆணையை மறந்து அரசாங்கம் வேறு திசையில் செல்கின்றது எனவும் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி தற்போது அரசாங்கம் பேசுவதில்லை எனவும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பிலான 6 உப குழுக்களின் அறிக்கைகளிலும் இது பற்றி பேசப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த குழுக்களின் அறிக்கையில், அதிகாரப் பகிர்வு பற்றியே இந்த அரசாங்கம் பேசுகின்றது என குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று பேசினாலும் அது சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தின் ஒரே இலக்கு நாட்டைப் பிரித்துக் கொடுப்பதே எனவும் அதை நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக ஒற்றையாட்சி என்ற போர்வையை இந்த அரசு போர்த்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றையாட்சி என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டே பிரிவினைவாதத்தை நோக்கி இந்த அரசு செல்கின்றது எனக் குறிப்பிட்ட அவர், அதற்குள் மறைந்துகொண்டே இந்த நாட்டைத் தமிழருக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றது எனவும் அதற்கு தாம் இடம் கொடுக்கமாட்டோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.