Header Ads

சுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம்



மயக்கும் மாலை பொழுதே நீ போ...போ இனிக்கும் இன்ப பதவியே வா ... வா என்று மாவை சேனாதிராசா பாடல் பாடித் திரியவேண்டிய காலம் இது. ஏன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை அமர்த்த அண்டை நாடும், சிங்கள நாடும் முடிவெடுத்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. தற்போது அவரை உச்சம் கொண்டு செல்லவேண்டும். அதன் ஒரு அங்கம் தான் சுமந்திரனைக் கொலை செய்ய முன் நாள் போராளிகள் முனைந்தார்கள் என்ற கட்டுக் கதை ஆகும்.

இயக்கத்தையே பிரித்து , புலிகளை தோல்வியுறவைத்த கருணாவை சும்மா விட்டு விட்டு, இந்த சுத்துமாத்து சுமந்திரனை கொல்ல முன் நாள் புலிகள் முனைந்தார்கள் என்று சிங்களம் கூறும் கட்டுக் கதையைக் கேட்க்க தமிழர்கள் ஒன்றும் கேணையர் அல்ல. கேட்ப்பவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஒட்டிச்சு என்று கூறுவார்களாம். அது போல சுமந்திரனைக் கொல்ல சதி என்ற வதந்தி. அவருக்கு தற்போது கூடுதல் பாதுகாப்பு. அதுபோக பெரும் புகழ் பெயர் எல்லாம் 1 செக்கனில் கிடைத்துள்ளது.

தனக்குப் பின்னால் சுமந்திரன் தலைவராக வந்தால் நல்லது என்று, சம்பந்தர் கருதுகிறாராம். மகன் ... மகன் என்று தான் அவர் சுமந்திரனை அழைப்பது வழக்கம். அப்ப எல்லாம் அவ்வளவு தானா ? இத்தனை வருடம் குப்பை கொட்டிய எனக்கு தலைவர் பதவி இல்லையா என்று மாவை வாயைப் பிழக்கிறார் என்கிறார்கள். இது எல்லாம் எங்கே போய் முடியும் ? ஆனால் சிங்களத்தை பொறுத்தவரை தமது சொல் கேட்டு ஆடக் கூடிய சுமந்திரனை பக்கா பிளான் போட்டு மேலே உயர்த்திவிட்டார்கள். இரண்டாவது விடையம் 4 புலிகள் உறுப்பினர்களை மீண்டும் வெற்றிகரமாக சிறையில் அடைத்துவிட்டார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.