Header Ads

லண்டன் KFC ல் தமிழர்கள் படும் பாடு: பொலித்தீன் பையை கட்டி வேலை செய் என்கிறார்



லண்டனில் சில பல தமிழர்கள் படும் பாடு சொல்லி மாளாது. மெயின் ஹெட் என்னும் பகுதியில் உள்ள KFC சிக்கன் உணவு எக்ஸ்பிரசில் வேலை செய்த தமிழர் ஒருவர் கையில் கொதிக்கும் எண்ணை பட்டுவிட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட கிளவுஸ்(கையுறை) ல் ஓட்டை இருந்துள்ளது. அதூடாக சூடான எண்ணை சென்று அவர் கையை பதம்பார்த்துவிட்டது. பெரும் எரிச்சல் மற்றும் நோ காரணமாக அவர் வேலையில் இருந்து வீடு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அனுமதி மறுத்த தமிழ் மேனேஜர். ஒரு பொலித்தீன் பையை எடுத்து அவரது கைகளை சுற்றி கட்டிவிட்டு.

இனி வேலைசெய்யலாம் என்று சொல்லி, சுமார் 4 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு தான் வீடு செல்ல அனுமதித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே கைகளில் கொப்பளம் போட்டு, அதில் உடைந்து நீர் வர ஆரம்பித்துள்ளது. இன் நிலையில் வைத்தியரிடன் அவர் சென்றவேளை. ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள என்று வைத்தியர் திட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட தமிழர் நடந்ததை சொல்ல, வைத்தியர் இது தவறு என்றும், இப்படி KFC செய்திருக்க கூடாது என்றும் கூறியுள்ளார். ஆங்கில அறிவு இல்லாத  இன் நபர் கஷ்டத்துடன் ஊடகத்தின் உதவியை நாடி தனக்கு உதவும் படி கூறியுள்ளார்.

சட்டம் தெரிந்த தமிழர்கள் யாராவது உதவி செய்ய விரும்பினால் இந்த அப்பாவி தமிழருக்கு உதவி செய்யுங்கள். தமிழனே தமிழனுக்கு எதிரி என்பர்கள். அது சரியாக தான் இருக்கிறது. கையில் கொதி எண்ணை பட்டால் எப்படி இருக்கும் ? அத்தோடு மேலும் வெக்கைக்குள் நின்று வேலை செய்தால் எப்படி இருக்கும் ? இவர்கள் எல்லாரும் மனிதர் தானா ? இல்லை வேறு ஜாதியா ? தெரியவில்லை... 

1 comment:

  1. could you please send me his details and kfc address i like to help him

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.