Header Ads

15 மாதங்களில் கடற்படைக்கு ரூ 3 பில்லியன் வருமானம்: இப்ப வேற மாதிரி உழைப்பு என்கிறார்கள்



கப்பல்களுக்கான பாதுகாப்பு அணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, 15 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற இலங்கைக் கடற்படை, இன்றுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை, வருமானமாகப் பெற்றுள்ளது.

பொதுவான கடற்பரப்பைப் பாதுகாப்பாற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் ஏதுவாக, இலங்கையின் கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளில், இலங்கைக் கடற்படை ஈடுபட்டதன் விரிவாகவே, இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய நாணயமாற்று வீதத்தின்படி, கடற்படையால் பெறப்பட்டுள்ள இந்த வருமானம், 3 பில்லியன் ரூபாயாக வருகிறது. காலியிலும் கொழும்பிலும் காணப்படும் செயற்பாட்டு நிலையங்களூடாகச் செல்லும் 8,200க்கும் மேற்பட்ட கடல் போக்குவரத்தினூடாகவே, இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, மாதமொன்றுக்கு 550 பாதுகாப்பு அணிகளை வழங்கும் கடற்படை, சராசரியாக 200 மில்லியன் ரூபாயை வருமானமாகப் பெறுகிறது.பாதுகாப்பு அணிகளை வழங்கும் பணிகளை, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், இலங்கைக் கடற்படை ஆரம்பித்திருந்தது. இதன் வருமானங்கள், அரசுக்கு நேரடியாக, தொகுதி நிதியத்தினூடாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.