Header Ads

நாசா அதிரடி: 7 பூமிகளை கண்டுபிடித்துள்ளது: மனிதர்கள் வாழக்கூடிய அதிசயம் உள்ளதாக தகவல்



அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளதாக கூறியுள்ளது. வெறும் 39 ஒளி ஆண்களுக்கு அப்பால் சூரியனை வட்டமிடும் 7 கிரகங்களை அது கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 3 கிரகங்கள் பூமியை ஒத்த நிலையில் உள்ளதாகவும். அதன் வெப்ப நிலை மற்றும் அங்கு தண்ணீர் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அதி முக்கியமான கிரகம் இதுவென்று கூறப்படுகிறது. பரந்து விரிந்துள்ள அண்டவெளியை, திசைகள் வாரியாக பிரித்து, பல இடங்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்கள் விஞ்ஞானிகள். அந்த வகையில் பூமிக்கு மிக அருகாமையில் உள்ள டாப்பிஸ் என்னும் இடத்தில் தான் இந்த சூரிய குடும்பம் அமைந்துள்ளது. எமது சூரியனை ஒத்த ஒரு சூரியனும் அதனை சுற்றி 7 கிரகங்களும் வலம் வருகிறது.

இந்த கண்டுபிடிப்பை அடுத்து பல நாட்டு விஞ்ஞானிகளின் கவனம் தற்போது இந்த கிரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் நாசா இக்கிரகத்தை நோக்கி தனது அதி நவீன சாட்டலைட்டை அனுப்ப உள்ளது என்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.