Header Ads

யெமன் நாட்டுக்குள் அதிரடியாக நுளைந்த அமெரிக்க சீல் படை: பின்லேடன் ஸ்டைல் கொலை



யெமன் நாட்டின் சானா என்னும் பகுதியில் ஒரு தளத்தில் பல அல்கைடா தீவிரவாதிகள் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தவேளை. அதிரடியாக ஹெலிகொப்டரில் சென்ற அமெரிக்க சீல் படையினர். அதில் இருந்து கயிறு மூலமாக குதித்து. அந்த கட்டத்தில் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அல்கைடா அதி முக்கிய தீவிராதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்க அதிபர் டொனால் ரம் கொடுத்த நேரடி உத்ரவில் இத்தாக்குதல் சற்று முன்னர் நடந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

அமெரிக்க அதிபராக டொனால் ரம் பொறுப்பேற்ற பின்னர், ஒரு நாட்டினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை ஆகும். இத்தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடந்துள்ளது. அமெரிக்க சீல் படைகளுக்கு ஒரு சிறு கீறல் கூட விளவில்லை. இன் நிலையில் வெற்றிகரமாக பல தளபதிகளை கொன்றுவிட்டு. அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் அமெரிக்க தளம் திரும்பியுள்ளார்கள் என அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.