Header Ads

கொழும்பை பரபரப்புக்குள்ளாக்கிய மாணவர் மோதலுக்கான காரணம் ஒரு மாணவி என கண்டுபிடிப்பு



கொழும்பில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல், மாணவி ஒருவர் தொடர்பில் எழுந்த தகராறினால் ஏற்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் எட்டு மாணவர்கள் காயமடைந்ததுடன், வாகனங்களுக்கும் சேதமேற்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 மாணவர்களில் 10 பேருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவை அனைத்துக்கும் காரணம் ஒரு மாணவி என்றும். இவர் ஒரு பள்ளிக்கூட மாணவனோடு தொடர்பில் இருந்தவேளை. மற்றைய பள்ளிக்கூட மாணவர் ஒருவர் கிண்டல் செய்ததால் இந்தப் பிரச்சனை மூண்டது என தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.