Header Ads

ஹபீஸ் ராக்கெட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்: கேரளாவுக்கு ஐ.எஸ் இடம் இருந்து வந்த தகவல்



கேரளாவில் இருந்து 20 பேர் கடந்த சில மாதங்களில் காணாமல் போனார்கள்.  அவர்களில் 11 பேர் பதன்னா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  அவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பது நீண்ட நாட்களாக தெரியவில்லை.

இந்நிலையில், அவர்களில் ஒருவரான ஹபீசுதீன் என்ற ஹபீஸ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து விட்டார் என தெரிய வந்தது.

கேரளாவின் வடக்கு மாவட்டம் பதன்னாவில் இருந்து காணாமல் போனவர்களில் ஒருவர் அப்ஷக்.  இவரது உறவினர் ஒருவருக்கு செல்போன் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் ஹபீஸ் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் உடல் அடக்கம் நடந்து விட்டது.  அவர் வீரமரணம் அடைந்து விட்டவராக நாங்கள் கருதுகிறோம்.  தாக்குதல் நடத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என அந்த தகவலில் இருந்துள்ளது.

இந்திய தேசிய புலனாய்வு கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு ஜூனில் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஹபீஸ் புறப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்றார் என தெரிவித்துள்ள

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.