Header Ads

சிரியாவில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் இடம்பெற்ற கோரச் சம்பவம்!

சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரின் மையப்பகுதியில் இன்று நிகழ்ந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். சிரியா: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் பலி கோப்பு படம் டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசமுள்ள பல முக்கிய நகரங்களை அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன. சில இடங்களில் மட்டும் இழந்த இடத்தை மீட்கவும், 


இருக்கும் இடத்தை பறிகொடுக்காமல் இருக்கவும் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்குள்ள ஹோம்ஸ் நகரின் மையப்பகுதியில் இன்று நிகழ்ந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். ஹோம்ஸ் மாநிலத்தில் உள்ள ராணுவ உளவுத்துறை தலைமை அலுவலத்தின் மீது இரு பிரிவுகளாக பிரிந்து, மனித குண்டுகளாக வந்த ஆறுபேர் அடுத்தடுத்து நடத்திய இரட்டை தாக்குதலில் பலர் காயமடைந்தனர். 


அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இன்றைய தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும்போது, இது ஐ.எஸ். தீவிரவாதிகள் நாச வேலையாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.