Header Ads

சித்தாண்டியில் போதை தலைக்கேறி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: என்ன கொடுமை என்று



ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களில் தொடர்ந்து தூக்கு போட்டு தற்கொலை செய்யும் வீதம் அதிகரித்துள்ளது.கடந்த மாதம் வந்தாறுமூலையில் சகோதரியுடன் தொலைக்காட்சி பார்க்கும் பிரச்சினையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.அதற்கு முந்திய மாதம் சந்திவெளியில் அக்காவிடம் பணம் கேட்டு கொடுக்காததால் தூக்கிட்டு தற்கொலை மீண்டும் நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு பட்டு சந்திவெளியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதை விட மற்றைய முறைகளிலும் தற்கொலை செய்யும் வீதமும் அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் சிறுவயது திருமணம்,அத்துடன் அதிகரித்த சாராயகுடி போன்றவற்றால் கணவன் மனைவியிற்கு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் புரிந்துணர்வு வயதுயின்மையால் திடிரென்று குழந்தைகளின் எதிர்காலத்தை யோசிக்காமல் பிரச்சினை தீர்வாக யாரோ ஒருவர் தன்னூயிரை மாய்ப்பது முடிவாக எடுத்து எதுவும்மறியாத குழந்தைகளின் வாழ்க்கையும் நரகத்தை நோக்கி தள்ளுகின்றனர்.

மீண்டும் இதே ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேணி வீதி சித்தாண்டி -2 ஐ சேர்ந்த "சாமித்தம்பி தர்மலிங்கம் "எனும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை போதை காரணமாக அவரது வீட்டில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.