Header Ads

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை

அனைத்து இஸ்­லா­மிய நிலப் பகு­தி­க­ளிலும் தமது கொடி பறப்­பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவ­தில்லை என ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்­சி­யொன்றில் தோன்றி சூளு­ரைத்­துள்ளான். 


லாதீன் என்ற அந்த சிறுவன், நப­ரொ­ரு­வரை தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­வ­தற்கு முன்னர் தான் எவ்­வாறு மேற்­படி தீவி­ர­வா­தக் குழுவில் இணைந்து கொண்டான் என்­பதை விப­ரிக்கிறான். நன்­றாகப் படிக்கும் பட்­சத்தில் தன்னை விடு­மு­றையின் போது (ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின்) இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அழைத்துச் செல்­வ­தாக தனது தந்தை தனக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­த­தாக அந்த சிறுவன் கூறு­கிறான். 'ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் இன்­னொரு குழந்தை பிர­ச­விப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்­சியின் ஆரம்­பத்தில் அந்த சிறுவன் சிறிய தோட்­ட­மொன்றைப் பரா­ம­ரித்து அங்­குள்ள தாவ­ரங்­க­ளுக்கு தண்ணீர் பாய்ச்­சு­வதை வெளிப்­ப­டுத்தும் காட்சி காண்­பிக்­கப் ­ப­டு­கி­றது. 


தனது தந்தை மோதல் ஒன்றில் இறப்­ப­தற்கு இரு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்ட இரா­ணுவ முகா­முக்கு தன்னை அழைத்து வந்து, 'நீ இவ்­வாறு தாவ­ரங்­களை நட்டு பரா­ம­ரித்த பின்னர் பொறு­மை­யாக இருக்க வேண்டும். அதே­ச­மயம் மத சட்­டத்தைக் கற்று கட­வு­ளுக்கு பய­பக்­தி­யாக இருக்க வேண்டும்' எனத் தெரி­வித்­தி­ருந்­ததாக சலாதீன் கூறினான். 'நான் நாஸ்­தி­கர்­க­ளுக்கு கூறும் செய்தி என்­ன­வென்றால், நான் கொடுங்­கோ­லர்­க­ளுக்­காக பணி­யாற்றும் ஆட்­களை தடுத்து நிறுத்தி இறை­வ­னுக்கு பணி செய்­வ­தற்­காக ஆசீர்­வ­திக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தேசத்­துக்கு புலம்­பெ­யர்ந்து வந்­துள்ளேன்" என அவன் தெரி­வித்தான். 


 “இறை­வ­னுக்கு அப்பால் யாரும் இல்லை. நாம் மதத்­துக்கு மட்­டுமே ஆத­ர­வ­ளிக்கி றோம். நாங்கள் இஸ்­லா­மிய தேசத்தின் குழந்­ தைகள். நாங்கள் அனைத்து இஸ்­லா­மிய நிலங்­க­ளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை" என சலாதீன் சூளு­ரைக்கிறான். 


 தொடர்ந்து அவன் சிறிய அறை­யொன்றின் மூலையில் அச்­சத்­துடன் நின்று கொண்டிருந்த நபரொ ருவரை நோக்கிச் சென்று அவரது தலையில் துப்பாக்கியால் சுடுகிறான். அதன் பின் அந்நபர் தரையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.