Header Ads

ஐ.எஸ் தளபதி காருக்கு எப்படி குண்டு போட்டது அமெரிக்க சி.ஐ.ஏ: ஒரு அதிரும் தகவல்



அமெரிக்காவில் இருந்து சிரியா சுமார் 6,600 மைல் தொலைவில் உள்ளது. கடந்த ஞாயிறு அன்று, சிரியாவில் உள்ள எல்டிப் என்னும் நகரில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் அதி முக்கிய தலைவரும் தளபதியுமான அப்துல் ரஜாப் காரில் பயணித்துகொண்டு இருந்துள்ளார். இத்தகவலை சிரியாவில் உளவு பார்க்கும் சிரிய இளைஞர்கள் சிலர் அமெரிக்கா சி.ஐ.ஏ க்கு தெரிவிக்க. ஏற்கனவே பல மணி நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டு இருந்த ஆளில்லா விமானத்தை (ட்டோன்) அவர்கள் குறித்த பகுதி நோக்கி திருப்பியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் சொன்ன திசையில் செல்லும் அனைத்து கார்களையும் மேலே இருந்தபடி பார்த்த அமெரிக்க பாதுகாப்பு துறை. ஒரு காரை அடையாளம் கண்டுகொண்டது. 6,000 மைல்கள் தொலைவில் கட்டுப்பாடு இருப்பதனால், ஆளில்லா விமானத்தில் இருந்து கிடைக்கும் வீடியோ சுமார் 6 அல்லது 9 நிமிட வித்தியாசத்தில் தான் கிடைக்கும். அப்படி இருக்கையில் , சில வேளை அவர்கள் பாக்கும் வீடியோ பழையதாக கூட இருக்கலாம். அவர்கள் பார்க்கும் அந்த செக்கனில் காரில் இருந்து அப்த்துல் இறங்கிச் சென்றும் இருக்கலாம்.

இதனால் தான் அமெரிக்கா தயாரித்துள்ள அனைத்து ஆளில்லா விமானங்களும், ஒன்றின் மேல் குறிவைத்தால். அதனை பின் தொடர்ந்து செல்ல வல்லவையாக தயாரிக்கபப்ட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்து என்று கமாண் கொடுத்தால் அது துரத்திச் சென்று சரியான ஒரு நேரத்தில் தாக்கும். அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு பாவித்த ஆளில்லா விமானம் மிகவும் நவீன ரக விமானம் என்று கூறப்படுகிறது. அது ஏவுகணைய ஏவி, பெரும் அழிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை. மாறாக சிறிய ரக ஏவு கணை ஒன்றையே அது ஏவியுள்ளது. அதில் 40 மில்லி மீட்டர் கிரனைட் உள்ளதாகவும். காரை துளைத்துச் சென்று உள்ளே தான் அது வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறே நடந்தும் உள்ளது. ஓடிக்கொண்டு இருந்த காரின் மேல் பக்கமாக துளைத்து. உள்ளே சென்று வெடித்து. அதில் பயணித்த அனைவரையும் அது கொன்றுள்ளது. ஆனால் அக்கம் பக்கத்தில் எந்த அழிவையும் அது ஏற்படுத்தவில்லை. ஐ.எஸ் அமைப்பின் மேலும் ஒரு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.