Header Ads

ஜெயித்தார் சசி கலா: பன்னீர் செல்வம் பதறி அடித்து ஓட்டம்: அதிரும் செய்திகள் வெளியானது



சிறை சென்றுவிட்டாலும், யாரைப் பார்த்து கை காட்டி விட்டு சசி கலா சென்றாரோ அவரே தமிழ் நாட்டு முதல்வராக இன்று மாலை பதவி ஏற்க்கிறார். பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவி அம்பேல் ஆகிவிட்டது. அவரை தாம் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக சசி கலா அறிவித்தார். அத்தோடு 11 பேர் அவரோடு சேர்ந்து இயங்கி வந்தார்கள். அவர்களின் நிலையும் பெரும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அனைத்து அமைச்சு பதவிகளும் பன்னீரிடம் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த பன்னீர் , ஒரே நாளில் சீரோ ஆகியுள்ளார்.

இன்று மாலை ராஜ்பவனில் 5.30 மணிக்கு, தமிழ ஆழுனர் எடபாடி பழனிச் சாமிக்கு பதவிப் பிரமானம் செய்து வைக்கிறார். இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் , இனி வரும் காலங்களில் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு கட்சி இரண்டாக உடையும் நிலை தோன்றினால். ஒரு அணியில் இருந்து மறு அணிக்கு தாவும் நபர்களை தடுக்க, பலமான அணி என்ன செய்யவேண்டும் ? உடனே தனது ஆதரவு ஆட்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து. அவர்களோடு பேசி, அங்கிருந்தே போராட்டம் நடத்த வேண்டும். இது தான் அந்த தாரக மந்திரம்.

தற்போது முதல்வராக பதவி ஏற்க்கவுள்ள பழனிச்சாமி சசி கலாவின் அதி கூடிய விசுவாசி. அதுபோக அதிமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் சசியின் உறவினர். சசி எதனை சொன்னாலும் மீற மாட்டார். எனவே ஆட்சி அதிகாரம் இன்னும் சசி கையில் தான் உள்ளது. கர்நாடக சிறையில் சசி இருந்தாலும். அங்கே இருந்து தான் , எல்லா ஆடர்களும் வரும்.

இனி நடக்கவுள்ள விடையம் (சிலவேளை நடக்கலாம்)

*தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி சசிக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பார்

*கர்நாடக சிறையில் சசிக்கு பாதுகாப்பு இல்லை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்படலாம்

*தமிழக சிறைக்கு மாற்றப்பட்டு, நன் நடத்தை அது இது என்று காட்டி தண்டனை காலத்திற்கு முன்னர் விடுதலையாகலாம்

*மேன் முறையீடு செய்து , சசி கலாவின் தண்டனையை மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

*மத்திய அரசோடு பேசி சில இணக்கப்பாட்டிற்கு வந்து , இந்த வழக்கை செயல் இழக்கச் செய்வது

*பரோலில் வெளியே வந்து சில நாட்கள், தமிழகத்தில் இருப்பது.

இதுபோன்ற பல நடவடிக்கை இனி வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும்.  ஆனால் ஒன்று ! எது எப்படி என்றாலும் அடுத்த தேர்தலில் அதிமுக பெரும்பாலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க வில் ஸ்டாலின் வெற்றி பெற்று, முதல்வராக வரவே பெரிய வாய்ப்புகள் உள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.